இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா
Published on

கொழும்பு,

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி கடந்த 15ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

கடைசி டெஸ்ட்

இந்நிலையில் இந்தியா , இலங்கை இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது.

இந்தியா 419/6

இந்நிலையில், 2ம் நாள் ஆட்டத்திலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 419 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 63 ரன்களிலும், துருவ் ஜோரேல் 59 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்தியா வலுவான நிலையில் உள்ளதால் இப்போட்டியிலும் இந்தியா வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com