

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (நவம்பர் 17) ராவல்பிண்டியில் தொடங்குகிறது. இந்தப் போட்டி முன்னதாக லாகூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு நிலவும் கடுமையான புகைமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக போட்டி ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்டது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
முன்னதாக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டும்.