இந்தியா - இங்கிலாந்து இடையிலான அரையிறுதிப்போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான அரையிறுதிப்போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
Published on

கயானா,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஆட்டம் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு நடைபெற இருந்தது.

இந்நிலையில் இந்த ஆட்டம் நடைபெற உள்ள கயானாவில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்திற்கு ரிசர்வ் நாள் கிடையாது. ஆட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் சூப்பர் 8 சுற்று புள்ளி பட்டியல் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com