ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்: விராட் கோலிக்கு மாற்று வீரர் இவரா ?

விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்: விராட் கோலிக்கு மாற்று வீரர் இவரா ?
Published on

மும்பை,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜூன் 6 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சண்டிகரில் நடைபெறுகிறது.

ஒருநாள் போட்டிக்கான அணியில் விராட் கோலி இடம் பெற்று இருந்த நிலையில் காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். இதனால் விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஒருநாள் தொடரில் விராட் கோலிக்கு மாற்று வீரராக ருதுராஜ் கெயிக்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com