வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவு: வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து முக்கிய வீரர்கள் விலகல்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவு: வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து  முக்கிய வீரர்கள் விலகல்
Published on: 

டாக்கா,

வங்கதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் அக்டோபர் 28-ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 5-ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் ஆகியோர் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்தகுதி மற்றும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு அல்சாரி ஜோசப்புக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்குத் தயாராகும் வகையில் ஷாய் ஹோப்புக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அல்சாரி ஜோசப்புக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் கீமோ பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

. மேலும், கெவின் விக்ஹாம் முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், காயத்திலிருந்து மீண்ட ஜான் கேம்ப்பெல் அணிக்குத் திரும்பியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com