பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் சாகித் அப்ரிடிக்கு மிகப்பெரிய பதவி...!

பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் சாகித் அப்ரிடிக்கு மிகப்பெரிய பதவி வழங்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் சாகித் அப்ரிடிக்கு மிகப்பெரிய பதவி...!
Published on

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தேசிய தேர்வுக் குழு  இடைக்காலத் தலைவராக முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடியை இன்று நியமித்துள்ளது.

முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் மற்றும் ராவ் இப்திகார் அஞ்சும் அடங்கிய நான்கு பேர் கொண்ட தேர்வுக்குழுவை அப்ரிடி வழிநடத்துவார்.

ஹரூன் ரஷித் கன்வீனராக இருப்பார். இப்போதைக்கு, நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கு மட்டுமே இந்த நியமனம்.

மேலும் முகமது வாசிம் தலைமையிலான முந்தைய குழுவால் அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணி குறித்த மறுபரிசீலனை செய்யவும் இந்த குழு  கேட்டு கொள்ளப்பட்டது.

இதுகுறித்து அப்ரிடி கூறும் போது

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு இந்தப் பொறுப்பை வழங்கியதை நான் பெருமையாக உணர்கிறேன், மேலும் எனது திறமைக்கு ஏற்றவாறு இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன்.

"நாங்கள் எங்கள் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும், தகுதி மற்றும் புள்ளிவிவர தேர்வு முடிவுகள் மூலம், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தேசிய அணி வலுவாக செயல்படவும், எங்கள் ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் நாங்கள் உதவுவோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

நான் விரைவில் இந்த் கூட்டத்தை கூட்டுவேன் தேர்வாளர்களின் கூட்டம் மற்றும் வரவிருக்கும் போட்டிகள் குறித்து எனது திட்டங்களை பகிர்ந்து கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.

சாகித் த் அப்ரிடி 1996 முதல் 2018 வரை 27 டெஸ்ட், 398 ஒருநாள் மற்றும் 99, 20 ஓவர் போட்டிகளில் விளையாடி மொத்தம் 11,196 ரன்கள் மற்றும் 541 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

83 சர்வதேசப் போட்டிகளில் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார். 2009 ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடந்த ஐசிசி ஆண்கள் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com