புகழின் உச்சத்தில் இருக்கும் போது கோலி ஓய்வு முடிவை அறிவிப்பார் என நம்புகிறேன்- சாகித் அப்ரிடி

கோலியின் ஓய்வு முடிவு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி பேசியுள்ளார்.
Image Tweeted By @imVkohli
Image Tweeted By @imVkohli
Published on

சென்னை,

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிக்காமல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான விராட் கோலி, ஆசிய கோப்பையில் சதம் அடித்து அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளார். நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.

இந்த நிலையில் கோலியின் ஓய்வு முடிவு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி பேசியுள்ளார். விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய சிறப்பான அதே பாணியில் தனது கிரிக்கெட் பயணத்தை முடிப்பார் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.

கோலி குறித்து அவர் கூறுகையில், " பார்ம் அவுட் காரணமாகி அணியில் இருந்து நீக்கப்படும் நிலையை கோலி அடையக்கூடாது. அதற்கு பதிலாக, அவர் புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வை அறிவிக்க வேண்டும். விராட் ஓய்வு முடிவை ஒரு நல்ல நிலையில் செய்வார் என்று நான் நம்புகிறேன். அவர் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியதைப் போன்றே தனக்கான அதிரடி பாணியில் தனது கிரிக்கெட் பயணத்தை முடிப்பார் "என்று அப்ரிடி கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com