'ஷாய் ஹோப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை’ - டேரன் சமி வேதனை

பிரையன் லாராவின் 19 சதங்கள் சாதனையை முறியடித்தார்.
ஷாய் ஹோப்
Published on: 

நியூ சண்டிகர்,

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றநிலையில், அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.

162 ரன்கள் குவித்த ஹோப்

வழக்கமான தொடக்க வீரர் ஜுவெல் ஆண்ட்ரூஸ் காயம் காரணமாக பேட்டிங் செய்ய முடியாத நிலையில், 50 ஓவர்கள் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஹோப் தொடக்க வீரராக களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அவர், ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஹோப், தனது ஒருநாள் சதங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தினார். இதன் மூலம் பிரையன் லாராவின் 19 சதங்கள் சாதனையை முறியடித்தார்.

“உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை”

இது குறித்து ஹோப்பை பாராட்டிய டேரன் சமி, “50 ஓவர்கள் விக்கெட் கீப்பராக செயல்பட்ட பிறகு, தொடக்க வீரராக களமிறங்கி இப்படியொரு இன்னிங்ஸை விளையாடியது சிறப்பானது. வெஸ்ட் இண்டீஸுக்காக அவர் செய்துள்ள சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைக்க வேண்டிய அளவுக்கு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் ஒரு தரமான வீரர்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com