ஷாய் ஹோப் அதிரடி சதம்... இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஷாய் ஹோப் அதிரடி சதம்... இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
Published on: 

ராஞ்சி,

2-வது டி20

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றநிலையில், இரு அணிகளுக்கிடையிலான 2-வது டி20 போட்டி ஜார் கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது.

சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம்

இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். இஷான் கிஷன் 22 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். திலக் வர்மா 18 பந்துகளில் 44 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 18 பந்துகளில் 40 ரன்களும் விளாசினர். அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.

ஷாய் ஹோப் சதம்

கமில் பூரன் 4 ரன்னிலும், ஹெட்மயர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், ஹெட்மயர் - ரூதர்போர்டு இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களின் அதிரடி ஆட்டத்தை இந்திய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ரூதர்போர்டு 37 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாய் ஹோப் கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். அத்துடன், 45 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்சருடன் சதமடித்து அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டி20 போட்டி இந்தூரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com