வங்காளதேச டெஸ்ட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் திடீர் மாற்றம்... கீமோ பாலுக்குப் பதிலாக ஷமார் ஸ்பிரிங்கர்

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
ஷமார் ஸ்பிரிங்கர்
Published on: 

புதுடெல்லி,

வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆல்-ரவுண்டர் ஷமார் ஸ்பிரிங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். கீமோ பாலுக்குப் பதிலாக அவர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

வங்காளதேசத்தில் டெஸ்ட் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக, வருகிற 22 முதல் 24-ஆம் தேதி வரை டாக்காவில் மூன்று நாள் பயிற்சிப் போட்டி நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து, முதல் டெஸ்ட் போட்டி 28 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை மிர்பூரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 5 முதல் 9-ஆம் தேதி வரை சில்ஹெட்டிலும் நடைபெறவுள்ளது.

ஷமார் ஸ்பிரிங்கருக்கு வாய்ப்பு

இந்நிலையில், சொந்தக் காரணங்களால் கீமோ பால் அணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஷமார் ஸ்பிரிங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பிரிங்கர் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவர் இன்னும் அறிமுகமாகவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி

ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமெல் வாரிகன் (துணைக் கேப்டன்), ஜோஷுவா பிஷப், ஜான் கேம்ப்பெல், சந்தர்பால், ஜோஷுவா டி சில்வா (விக்கெட் கீப்பர்), ஜஸ்டின் கிரீவ்ஸ், கவீம் ஹாட்ஜ், அமீர் ஜாங்கோ (விக்கெட் கீப்பர்), ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், கேமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஸ்பிரிங்கர், கெவின் விக்காம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com