இன்ஸ்டாகிராமில் கணவர் பெயரை நீக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி- ரசிகர்கள் குழப்பம்

தனஸ்ரீ வர்மாவை இன்ஸ்டாகிராமில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் கணவர் பெயரை நீக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி- ரசிகர்கள் குழப்பம்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தனஸ்ரீ வர்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் 'ஆக்ட்டிவாக' இருப்பவர். இவர் பதிவிடும் நடன வீடியோக்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் 'தனஸ்ரீ சஹால்' என்ற பெயருடன் தனஸ்ரீ தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது தனது கணவரின் பெயரை நீக்கி மீண்டும் தனஸ்ரீ வர்மா என மாற்றியுள்ளார்.

இதை தொடர்ந்து சஹால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "புதிய வாழ்க்கை தயாராகிறது" என பதிவிட்டு இருந்தார். பிரபல நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவை பிரியும் முன்பு சமூக வலைதள கணக்குகளில் இருந்து அகினேனியை நீக்கினார். இதனால் சஹால்- தனஸ்ரீ வர்மா இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிகிறார்களா என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதனால் சமூக வலைத்தளங்களில் இவர்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சஹால்- தனஸ்ரீ வர்மா விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com