

ஆமதாபாத்,
ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மூன்றாவது டி20 உலகக்கோப்பை பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை பல கிரிக்கெட் நிபுணர்கள் பாராட்டிய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில்,
“ஒரு தெருவில் உள்ள பணக்கார வீட்டுப் பையன், அக்கம் பக்கத்தில் இருக்கும் ஏழைப் பசங்களை எல்லாம் அழைத்து 'வாங்க கிரிக்கெட் விளையாடலாம்' என்று கூறுவதைப் போலத்தான் இந்தியா நடந்துகொள்கிறது. எட்டு அணிகளில் நான்கு அணிகளை தேர்வு செய்கிறது, பின்னர் அந்த நான்கில் மூன்றை அழைத்து விளையாடி, பின்னர் ‘நான் வென்றுவிட்டேன்’ என்று கூறுகிறது. இதுதான் தற்போது நடக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டார்கள்,” என்றார்.
ஆனால் இறுதிப்போட்டிக்கு முன்பு அவர் வேறுவிதமாக கருத்து தெரிவித்திருந்தார். இந்தியா மிகவும் வலுவான அணி என்றாலும், நியூசிலாந்து கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.