

மும்பை
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்த போட்டிகளில், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டு உள்ளார். நடப்பு ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டியில் அணியை கேப்டனாக வழிநடத்தி சென்று கோப்பையை வென்றார்.
இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெறவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர், ஒரு கேப்டனாக 2024-ம் ஆண்டு கொல்கத்தா அணியில் இடம் பெற்று கோப்பையை வெல்ல உதவினார். அடுத்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதில், அந்த அணி 2-வது இடம் பிடித்தது. இந்த டி20 தொடர் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் உடன், துணை கேப்டனாக திலக் வர்மா இருப்பார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூரியவன்ஷி.
இந்திய டி20 அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் வரவு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.