

லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
லக்னோவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய பஞ்சாப் அணியில், ஸ்ரேயாஸ் ஐயர், 51 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என சதம் (101 நாட்-அவுட்) விளாசினார். இதனால், சேசிங்கில் சதம் அடித்த 4-வது கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சேவாக், கோலி மற்றும் சஞ்சு சாம்சன் இந்த சாதனையை படைத்திருந்தனர். இதில், சேவாக் (119), கோலி (108) மற்றும் சஞ்சு சாம்சன் (119) ரன்கள் எடுத்திருந்தனர்.
ஐ.பி.எல்.லில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் (132 நாட்-அவுட்), ஆடம் கில்கிறிஸ்ட் (106) ஆகியோருக்கு அடுத்து, பஞ்சாப் அணி சார்பில் சதம் விளாசிய 3-வது கேப்டனும் ஆவார். டி20 போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களையும் ஸ்ரேயாஸ் கடந்துள்ளார். அவர் 247 போட்டிகளில் 7,076 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 4 சதங்களும், 48 அரை சதங்களும் அடங்கும்.