

திருவனந்தபுரம்,
பயிற்சியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதனப்டி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது. கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டிக்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சுப்மன் கில்லின் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. முகமது சிராஜ் வீசிய பந்து சுப்மன் கில்லின் வலது முழங்கையை தாக்கியது.
இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுப்மன் கில் பயிற்சியில் ஈடுபடவில்லை. ஒருநாள் போட்டிக்கு இன்னும் 2 நாட்கள் உள்ளதால் காயத்தில் இருந்து சுப்மன் கில் மீள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.