வங்காளதேச பிரீமியர் லீக்: ரங்க்பூர் ரைடர்ஸ் அணியில் சிக்கந்தர் ராசா ஒப்பந்தம்

பிபிஎல் தொடரில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாட சிக்கந்தர் ராசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

டாக்கா,

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருவது போல பல நாடுகளிலும் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வங்காளதேசத்தில் பி.பி.எல் (வங்காளதேச பிரீமியர் லீக்) தொடர் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான பிபிஎல் தொடரில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஜிம்பாப்வேயின் ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியின் வெற்றியில் ராசா முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் அவர் பிபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

முகமது நவாஸ், ஹரிஸ் ரவுப், பத்தும் நிசாங்கா மற்றும் சோயப் மாலிக் ஆகியோரையும் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடிய ராசா 219 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com