பிரசித் கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்ட சிராஜ் ... ஏன் தெரியுமா..?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 23 ரன்கள் கூடுதலாகும்.

23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 374ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் விளையாடியது. தொடக்கம் முதல் பென் டக்கெட் , ஜாக் கிராலி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் .

தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலி 14 ரன்களுக்கு முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பென் டக்கெட் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஆலி போப் 27 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதம் கடந்தனர். 4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரி புரூக் 111 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 105 ரன்னில் வெளியேறினார்.மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.

இறுதியில், நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 35 ரன்கள் தேவை.இந்தியா வெற்றி பெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால் இன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா வீசிய ஒரு ஷார்ட் பாலை ஹாரி புரூக் அபாரமாக அடித்தார். ஆனால் அந்த பந்து பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த சிராஜிடம் சென்றது. இந்த பந்தை சிராஜ் கேட்ச் பிடித்துவிட்டு நேராக சிக்சர் லைனில் கால் வைத்து நின்றுவிட்டார். இதனால் இது சிக்ஸராக மாறியது. அந்த கேட்ச் மட்டும் சிராஜ் பிடித்திருந்தால், இந்நேரம் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கக்கூடும்.

இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறி இருக்கின்றது. இந்த நிலையில் தான் தவறு செய்து விட்டதை உணர்ந்த சிராஜ் பவுலர் பிரசித் கிருஷ்ணாவிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com