சிராஜுக்கு வாய்ப்பு மறுப்பு: முகமது கைப் ஆதங்கம்

ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

சிராஜுக்கு வாய்ப்பு மறுப்பு: முகமது கைப் ஆதங்கம்
Published on: 

இந்திய அணி கடந்த 7 ஆண்டுகளில் ஆசியாவுக்கு வெளியே வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இல்லாமல் வெற்றி பெற்றதில்லை. இந்த காலக்கட்டத்தில் இந்தியா வெற்றி கண்ட 10 டெஸ்டுகளிலும் முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார். நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் கழற்றி விடப்பட்ட முகமது சிராஜிக்கு நேற்று தொடங்கிய 2-வது டெஸ்டிலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முடிவை முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாபர். முகமது கைப் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சிராஜ்

முகமது கைப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒரு வரான முகமது சிராஜ், மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. வெளிநாட் டில் நடக்கும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய பந்துவீச்சு குழுவில் பும்ராவுடன் இணைந்து தாக்குதல் தொடுப்பதில் முதலில் பரிசீலிக்கப்பட வேண்டிய பெயர்களில் சிராஜியும் ஒருவர். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால், இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், முகமது சிராஜியை உலகத்தரம் வாய்ந்த பந்து வீச் சாளர் என குறிப்பிட்டதோடு அவர் சிறப்பாக பந்து வீசி வருவதாகவும் கூறியிருந்தார். அப்படி இருந்தும் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார்.

32 வயதான முகமது சிராஜ் இதுவரை 48 டெஸ்டுகளில் விளையாடி 144 விக்கெட் எடுத்துள்ளார்.

X