சிராஜை அணியில் சேர்க்காதது வருத்தமளிக்கிறது - கபில் தேவ்

சிராஜ் போன்ற திறமை கொண்ட வீரர் அணியில் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிராஜை அணியில் சேர்க்காதது வருத்தமளிக்கிறது - கபில் தேவ்
Published on: 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சிராஜ் போன்ற ஆர்வமும் திறமையும் கொண்ட வீரர் அணியில் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் முகமது சிராஜுக்கு இடம் கிடைக்கவில்லை. இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

சிராஜ்

தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியில் வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக சிராஜ் உள்ளார். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் 11 டெஸ்ட் ஆட்டங்களில் 43 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இத்தகைய சிறப்பான புள்ளிவிவரங்கள் இருந்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கபில் தேவ்

இதுகுறித்து பேசிய 1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், “சிராஜ் அணியில் இல்லாதது எனக்கும் வருத்தமாக இருக்கிறது. அவர் மிகவும் ஆர்வத்துடன் செயல்படும் ஒரு வீரர். அப்படிப்பட்ட வீரர் அணியில் இல்லாதபோது நாம் என்ன சொல்ல முடியும்?” என்று தெரிவித்துள்ளார்.

X