விரைவாக 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்து ஸ்மிரிதி மந்தனா சாதனை

ஸ்மிரிதி மந்தனா விரைவாக 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்த முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை படைத்து உள்ளார்.
விரைவாக 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்து ஸ்மிரிதி மந்தனா சாதனை
Published on

கேண்டர்பரி,

இங்கிலாந்தின் கேன்டர்பரியில் நடந்து வரும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இதில், இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்து புதிய சாதனை படைத்து உள்ளார்.

இதன்படி, இந்த எலக்கை விரைவாக எட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அவர் 76 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளார். இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் 88 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், அதனை மந்தனா முறியடித்து உள்ளார்.

ஸ்மிரிதி மந்தனா விரைவாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற பெருமையுடன், இந்திய அளவில் 3-வது நபர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அவருக்கு முன் ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் விளையாடி இந்த சாதனையை படைத்து உள்ளனர். அவர்களுக்கு அடுத்து மந்தனா 76 போட்டிகளில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com