யுனிசெப் அமைப்புடன் இணைந்த ஸ்மிருதி மந்தனா

மந்தனாவின் புதிய பொறுப்புக்கு சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

யுனிசெப் அமைப்புடன் இணைந்த ஸ்மிருதி மந்தனா
Published on: 

புதுடெல்லி,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, யுனிசெஃப் இந்தியா (UNICEF India) அமைப்பின் பிரபல ஆதரவாளராக இணைந்துள்ளார். குழந்தைகளின் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் சிறுமிகளுக்குச் சமமான வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது சிறுவயது கிரிக்கெட் அனுபவங்களை நினைவுகூர்ந்த மந்தனா, ஒவ்வொரு சிறுமிக்கும் தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து தனது கனவுகளை அடைவதற்கான சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குடும்பத்தின் ஊக்கமும் வாய்ப்புகளும் தனது கிரிக்கெட் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுனிசெப் அமைப்பின் தெற்காசிய நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டு வரும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மந்தனாவின் புதிய பொறுப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மந்தனா, மைதானத்திற்கு வெளியேயும் குழந்தைகளின் உரிமைகளுக்காக வலுவான குரலாக இருப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com