பீல்டிங்கில் இன்னும் சில முன்னேற்றம் தேவை: இந்திய அணி கேப்டன்

சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.


பீல்டிங்கில் இன்னும் சில முன்னேற்றம் தேவை: இந்திய அணி கேப்டன்
Published on: 

வதோதரா,

இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி வதோத ராவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 49.5 ஓவர்களில் 197 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிலவ்ட் பிசா 62 ரன்கள் எடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

வெற்றி தொடர்பாக பேசிய இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறியதாவது,

சூழ்நிலைகளுக்கு மிகச் சிறப்பாகத் தங்களை மாற்றிக்கொண்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசினர். அதேசமயம், ஃபீல்டிங்கில் சில கேட்ச்களைத் தவறவிட்டதால், அந்தப் பகுதியில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. இருப்பினும், ஷஃபாலி வர்மா மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர் இலக்கைத் துரத்திய விதம் அபாரமாக இருந்தது . 20 முதல் 35 ஓவர்கள் வரையிலான கட்டத்தில் பீல்டிங்கில் இன்னும் அதிக தீவிரத்துடன் செயல்பட்டிருக்கலாம் இந்தப் போட்டியில் கிடைத்த அனுபவத்தைப் பயன்படுத்தி அந்தக் குறையைச் சரிசெய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com