

லார்ட்ஸ்,
இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அத்துடன், தொடரையும் பறிகொடுத்தது. இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் தொடர்பாக கேப்டன் கில் கூறியதாவது,
உலகக் கோப்பையை இலக்காக வைத்துக் கொண்டால், அங்கு தொடர்ச்சியாக 11 போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும். ஆனால் இங்கு நம்முடைய சில வீரர்களால் 2 அல்லது 3 போட்டிகள் கொண்ட ஒரு தொடரைக்கூட முழுமையாக விளையாட முடியாத நிலை உள்ளது. இதுவே நமக்குள்ள மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. வீரர்கள் ஓரிரு போட்டிகளில் விளையாடிய பிறகு சிறிய காயங்களுக்கு ஆளாகிறார்கள். அதன் காரணமாக அணியின் சேர்க்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, ஒரு அணியாக நாங்கள் உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்னும் பல அம்சங்களில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.என தெரிவித்தார்.