சில நேரங்களில் காத்திருக்க வேண்டும்: வைபவ் சூர்யவன்ஷிக்கு ஷ்ரேயாஸ் அய்யர் அட்வைஸ்

நான் வைபவ் சூர்யவன்ஷியிடம் தொடர்ந்து இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
சில நேரங்களில் காத்திருக்க வேண்டும்: வைபவ் சூர்யவன்ஷிக்கு ஷ்ரேயாஸ் அய்யர் அட்வைஸ்
Published on: 

பெங்களூரு,

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2–2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. பெங்களூருவில் நடைபெற்ற கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. தொடரில் வைபவ் விளையாட வாய்ப்பு பெறாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் வைபவ் சூர்யவன்ஷியிடம் தொடர்ந்து இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்: ‘உனக்கான வாய்ப்புகள் நிச்சயமாகக் கிடைக்கும். நீ உன்னுடைய செயல்முறையில் தொடர்ந்து உறுதியாக இரு. வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அதிகமாகச் சிந்திக்காதே. சில நேரங்களில் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

உலகக் கோப்பையை வென்று கொடுத்த இரண்டு அற்புதமான தொடக்க ஆட்டக்காரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.’”என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்காதது குறித்துக் கேள்வி எழுந்தபோது, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். வைபவின் திறமை மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறிய அவர், ஏற்கெனவே அணியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியிருப்பதாக விளக்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com