

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சோனி பேக்கர் (Sonny Baker), ஐபிஎல் 2027 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம் வேகப்பந்து வீச்சாளரான சோனி பேக்கரை ஏலத்தில் வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அதிக ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2027 ஐபிஎல் ஏலத்தில் அவர் கவனம் பெறும் வீரர்களில் ஒருவராக இருப்பார் எனக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் 23 வயது வேகப்பந்து வீச்சாளர் சோனி பேக்கர், டிசம்பர் 16-ந்தேதி நடைபெற உள்ள ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்ய முடிவு செய்துள்ளார்.சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும், இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடரான டி20 பிளாஸ்டில் ஹாம்ப்ஷயர் அணிக்காக விளையாடி 8 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
சோனி பேக்கரை ஏலத்தில் வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக தி ஹண்ட்ரெட் தொடரில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவம் லக்னோ அணிக்கு அவரைப் பற்றி கூடுதல் புரிதலை அளித்துள்ளது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்க், ஐபிஎல் 2027 ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஷஸ் தொடருக்கான தயாரிப்பிலும், தனது உடல் பணிச்சுமையை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதனால் ஐபிஎல் அணிகள் அவரை ஏலத்தில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.