தென் ஆப்பிரிக்க அணியின் அனைத்து வடிவ போட்டிக்கும் ஒரே தலைமை பயிற்சியாளர் நியமனம்

வெள்ளைப்பந்து போட்டிகளுக்கான பயிற்சியாளராக இருந்த ராப் வால்டர் கடந்த ஏப்ரல் மாதம் விலகினார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவ (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக சுக்ரி கான்ராட் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இருந்த சுக்ரி கான்ராட் தற்போது வெள்ளைப்பந்து அணிகளுக்கான (டி20 மற்றும் ஒருநாள்) தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைப்பந்து போட்டிகளுக்கான பயிற்சியாளராக இருந்த ராப் வால்டர் கடந்த ஏப்ரல் மாதம் விலகினார். இதனையடுத்து இந்த பதவி சுக்ரி கான்ராடுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவரது தலைமையின் கீழ் தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com