

கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. போட்செப்ஸ்ட்ரூம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ள நிலையில் அப்பகுதியில் திடீரென மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.