தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் தொடர் ரத்து

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின், பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் தொடர் ரத்து
Published on

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது உள்ளூரில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி இந்தியாவில் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.

அதன் பிறகு பாகிஸ்தான் சென்று மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் வீரர்கள் பணிச்சுமை காரணமாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின், பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டி தொடர் குறித்து இரு நாட்டு வாரியங்களும் கலந்து பேசி பின்னர் மாற்று தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com