கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

டெஸ்ட் தொடர் 1-1 என்ற புள்ளி கணக்கில் சம நிலையில் உள்ளது.
கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இன்று மோதல்
Published on: 

கேப் டவுன்,

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்றன. இதனால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற புள்ளி கணக்கில் சம நிலையில் உள்ளது.

கடைசி டெஸ்ட்

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது. கேப் டவுன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இப்போட்டியில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்று தொடங்கும் கடைசி டெஸ்ட்டில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

X

Daily Thanthi
www.dailythanthi.com