கடைசி டெஸ்ட்: 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 140/4

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
கடைசி டெஸ்ட்: 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 140/4
Published on: 

கேப் டவுன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்றன. இதனால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளது.

கடைசி டெஸ்ட்

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 27ம் தேதி தொடங்கியது. கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போடியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

தென் ஆப்பிரிக்கா 329 ரன்கள்

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் மார்கஸ் அகர்மென் அதிகபட்சமாக 95 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிச்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா 429 ரன்கள்

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 429 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஜோஸ் இங்கிலிஸ் அதிகபட்சமாக 102 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஹார்மர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 100 ரன்கள் முன்னிலை பெற்றது.

தென் ஆப்பிரிக்கா 140/4

இந்நிலையில், 100 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் மார்கஸ் அகர்மென் அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஆஸ்திரேலிய தரப்பில் மிச்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 40 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மேத்தீவ் 19 ரன்களுடனும், ரயான் ரிக்கில்டன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆட்டத்தில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா தடுமாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X