சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் திடீர் ஓய்வு

இவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

33-வயதான அவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் உள்பட 2,141 ரன்களும், 58 டி20 போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களும் அடித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்றார்.

கிளாசென் கடைசியாக ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடினார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அண்மையில் வெளியிட்ட இந்த வருடத்திற்கான மத்திய ஒப்பந்த பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்த சூழலில் தற்போது அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.

இவர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாட உள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com