ஆட்டநாயன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன்தான்- ஹர்திக் பாண்ட்யா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன்தான் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
ஆட்டநாயன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன்தான்- ஹர்திக் பாண்ட்யா
Published on: 

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், 2-வது போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றதோடு தொடரையும் தன்வசப்படுத்தியது.

இந்திய அணியில் தமிழக வீரர் டி நடராஜன் அபாரமாக பந்து வீசினார். 4 ஓவர்கள் பந்து வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது இந்த சிக்கனமான பந்து வீச்சே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது. எனினும், இந்திய அணி 195-ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்ய ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. 22 பந்துகளைச் சந்தித்த ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 42 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு பாண்ட்யா கூறுகையில்,

' இந்த வெற்றி எளிதானது. இதுபோன்ற ஸ்கோர் கார்டை பார்த்துக்கொண்டு விளையாடுவது நான் விரும்புவேன். ஏனெனில் அப்போதுதான் நாம் எந்த பந்து வீச்சாளரை குறிவைத்து அதிக ரன்கள் அடிக்கலாம் என திட்டமிட முடியும். இது போன்ற நெருக்கடியான தருணங்களில் நான் பல முறை எதிர்கொண்டுள்ளேன். கடந்த கால தவறுகளில் இருந்து நிறைய பாடம் கற்றுள்ளேன்.

என்னைப் பொருத்தவரை இன்றைய ஆட்டத்தில் நடராஜனுக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும். அவரின் துல்லியமான பந்துவீச்சால்தான் இலக்கில் 10 ரன்கள் குறைந்தது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com