ஆவடியில் நடந்த விளையாட்டு போட்டி: 6 பரிசுகளை வென்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

விளையாட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஆவடியில் நடந்த விளையாட்டு போட்டி: 6 பரிசுகளை வென்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
Published on

சென்னை,

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள கலாம் விளையாட்டு கழகத்தின் சார்பில், பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 27 மாணவர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய இப்பள்ளி மாணவர்கள், 2 முதல் பரிசுகளையும், 2 இரண்டாம் பரிசுகளையும், 2 மூன்றாம் பரிசுகளையும் பெற்றனர். மேலும், சுழல் கேடயமும் இப்பள்ளிக்கு கிடைத்தது.

போட்டியில் வென்ற மாணவர்களையும், அழைத்து சென்ற விளையாட்டு ஆசிரியர் சதீஷையும் சென்னை வாழ் நாடார் சங்கத்தின் தலைவர் டி.தங்கமுத்து, பள்ளி முதல்வர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் பாராட்டினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com