

முல்லான்பூர்,
ஐதராபாத் அணியின் பந்துவீச்சுக்கு 220 ரன்களுக்கு குறைவான இலக்கை எதிரணியை எட்டவிடாமல் தடுக்கும் திறன் தற்போது இல்லை என அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிளாசன் தெரிவித்துள்ளார்.
ஐபில் 2026 தொடரில் இன்று நடந்து வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் அவர் அளித்த பேட்டியில், பேட்டிங்கில் இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
ஐதராபாத் அணி இந்த சீசனில் சீரற்ற தொடக்கத்தைக் கண்டுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியே பெற்றுள்ளது. நல்ல தொடக்கங்கள் இருந்தும், அதை பெரிய ஸ்கோர்களாக மாற்ற முடியாததே அணியின் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
ஐதராபாத் அணி இன்று முல்லான்பூரில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.