

தோஹா,
நடப்புச் சம்பியனான பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணியை எதிர்கொண்டது.
தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தான் அணியில் ஷாஹ்சைப் கான் அதிகபட்சமாக 91 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஷமில் ஹூசைன் 40 ரன்களும், விக்கெட் கீப்பர் ரோஹைல் நசீர் 37 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் அப்துல் சமத் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இறுதியில் பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை ஏ அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ 'ஏ' அணிக்கு தொடக்க வீரர் சினெத் ஜயவர்தன 13 பந்துகளில் 20 ரன்களில் அதிரடித் தொடக்கம் கொடுத்தார்.
லசித் குரூஸ்புள்ளே 26 ரன்களில் ஆட்டமிழக்க, 3ஆவது விக்கெட்டுக்காகக் கைகோர்த்த நிஷான் மதுஷ்க மற்றும் அணித்தலைவர் பவன் ரத்நாயக்க ஆகியோர் 80 ரன்களை ஜோடியாக பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
பவன் ரத்நாயக்க 30 ரன்களுடன் ஆட்டமிழந்த நிலையில், மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய நிஷான் மதுஷ்க 87 ரன்களை பெற்ற போது ஆட்டமிழந்தார்.
83 பந்துகளில் 19 ரன்களில் பெற வேண்டிய நிலையில் விஜயகாந்த் வியாஸ்காந்தும் 13 ரன்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வௌியேறினர்.
இறுதி வரை இலங்கை அணி வெற்றிக்காக போராடிய நிலையில் 41.3 ஓவர்களில் 220 ரன்கள் எட்டிய இலங்கை ஏ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
முன்னதாக அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய ஏ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த இலங்கை ஏ அணி, இந்த அபார வெற்றியின் மூலம் 2026 வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத்தைக் கம்பீரமாகக் கைப்பற்றியுள்ளது.