பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு... புதிய கேப்டனாக குசல் மெண்டிஸ்

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 9-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது.
இலங்கை
Published on: 

கொழும்பு,

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 9-ல் முதல் டெஸ்ட்

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 9-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 17-ம் தேதி லாகூரில் தொடங்க உள்ளது.

இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த தனஞ்செய டி சில்வா பதவி விலகியதைத் தொடர்ந்து, குசல் மெண்டிஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்குத் தலைமை தாங்கி வரும் அவர், தற்போது டெஸ்ட் அணியையும் வழிநடத்த உள்ளார்.

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி

குசல் மெண்டிஸ் (கேப்டன்), பதும் நிசங்கா*, பசிந்து சூரியபண்டாரா, தினேஷ் சண்டிமல், கமிந்து மெண்டிஸ், சோனல் தனுஷா, தனஞ்செய டி சில்வா, அஞ்சலா பண்டாரா, கேஷரா நுவந்தா, பிரபாத் ஜெயசூர்யா, மிலன் ரத்நாயக்கா, லஹிரு குமார, அசிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா, ஈஷான் மலிங்கா.

முதல் தொடர்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–2027 சுழற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தொடர் நடைபெறுகிறது. குசல் மெண்டிஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு பங்கேற்கும் முதல் தொடராக இது அமைகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com