தொடரை கைப்பற்றும் முனைப்பில் இலங்கை... 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவுடன் இன்று மோதல்..!

டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.
Image Courtesy: @OfficialSLC
Image Courtesy: @OfficialSLC
Published on

கொழும்பு,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இலங்கை அணி ஆட உள்ளது. அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஜிம்பாப்வே ஆட உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com