ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு...!

ஏஞ்சலோ மேத்யூஸ் 3 வருடங்கள் கழித்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
image courtesy; ICC
image courtesy; ICC
Published on

கொழும்பு,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வரும் 14-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏஞ்சலோ மேத்யூஸ் 3 வருடங்கள் கழித்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.

இலங்கை அணி விவரம் பின்வருமாறு;-

வனிந்து ஹசரங்க (கேப்டன்), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, குசல் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பதும் நிசாங்கா, மகேஷ் தீக்ஷன, துஷ்மந் சமிரா, தில்ஷன் மதுசங்கா, மதீஷா பதிரனா, நுவன் துஷார, அகில தனஞ்சய.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com