2024-ம் ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரராக நட்சத்திர பேட்ஸ்மேன் தேர்வு

image courtesy: AFP
2024-ம் ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரராக நட்சத்திர பேட்ஸ்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரராக நட்சத்திர பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோரை தாண்டி இவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சிறந்த வீரர் விருதுக்கான ஆலன் பார்டர் பதக்கம் வழங்கப்பட்டது. அவர் இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் சிறந்த ஒரு நாள் போட்டி வீரராகவும் அவரே தேர்வு செய்யப்பட்டார்.
ஆடம் ஜம்பா சிறந்த டி20 வீரர் விருதையும், ஹேசில்வுட் சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் தட்டி சென்றனர்.
Related Tags :
Next Story