12 ரன்கள்... 6 விக்கெட்டுகள் - ஸ்டெயினின் சாதனையை முறியடித்த ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
Published on

மெக்காய்,

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

அதிக விக்கெட்டுகள்

இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஸ்டார்க்கின் விக்கெட் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்தது.

இதன்மூலம் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார்.

டேல் ஸ்டெயினை பின்னுக்கு தள்ளினார்

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 441 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் 439 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 10-வது இடத்தை ஸ்டார்க் பிடித்துள்ளார்.

முதல் பந்திலேயே விக்கெட்

இந்த போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே ஷாட்மேன் இஸ்லாமின் விக்கெட்டை வீழ்த்தி ஸ்டார்க் அசத்தினார். மேலும், வெறும் 22 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்காளதேச அணியை நிலைகுலையச் செய்தார்.

64 ரன்களுக்கு ஆல்-அவுட்

ஸ்டார்க்கின் இந்த அபாரமான பந்துவீச்சால் வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 64 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து தனது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா முதல்நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com