உங்கள் லட்சியங்களுக்கு உண்மையாக இருங்கள் - இளைஞர்களுக்கு விராட் கோலி அறிவுரை

பெங்களுரு அணி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.
உங்கள் லட்சியங்களுக்கு உண்மையாக இருங்கள் - இளைஞர்களுக்கு விராட் கோலி அறிவுரை
Published on

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்றுள்ளது. பெங்களுரு அணி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், இன்று விராட் கோலி மேற்கு டெல்லியில் கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்தார். பின்னர் இளைஞர்களுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உங்கள் லட்சியங்களுக்கு நீங்கள் 100% நேர்மையாக இருங்கள். அந்த லட்சியத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் உழைப்பினை கொடுங்கள். நீங்கள் உங்கள் கனவினை அடைய எந்தளவிற்கு நேர்மையாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com