முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம்..!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு சத்யா சாய் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம்..!
Published on

பெங்களூரு,

சிக்பள்ளாப்பூர் தாலுகா முத்தேனஹள்ளியை அடுத்த சத்யா சாய் கிராமத்தில் சத்யா சாய் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் கிரிக்கெட், இசை மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சத்யா சாய் பல்கலைக்கழகம் சார்பில் விளையாட்டு துறையில் சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், கவுரவ டாக்டர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சத்யா சாய் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதேபோல் பல்வேறு துறையில் சாதனை படைத்த 5 பேருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com