சூப்பர் 4 சுற்று: இலங்கை - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
 Image Courtesy: @ACCMedia1
Image Courtesy: @ACCMedia1
Published on

துபாய்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றிருந்தன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. அதன்படி சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன. சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும். இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞம் இருக்காது.இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com