சூப்பர் 8 சுற்று: சால்ட், பேர்ஸ்டோவ் அதிரடி..வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி


சூப்பர் 8 சுற்று: சால்ட், பேர்ஸ்டோவ் அதிரடி..வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
x
தினத்தந்தி 20 Jun 2024 9:26 AM IST (Updated: 20 Jun 2024 9:28 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சால்ட் 87 ரன்கள் குவித்தார்.

செயிண்ட் லூசியா,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 180 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சார்லஸ் 38 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரரான பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி 13 ரன்களில் அவுட்டானார்.

இதனையடுத்து கை கோர்த்த பிலிப் சால்ட் - பேர்ஸ்டோவ் இணை வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இதனால் இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிய இங்கிலாந்து வெறும் 17.3 ஓவர்களிலேயே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 87 ரன்களும், பேர்ஸ்டோவ் 48 ரன்களும் அடித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல் மற்றும் சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

1 More update

Next Story