175 ரன்களை கடந்தார்: டி20 கிரிக்கெட்டில் புதிய ராஜா.... கெய்லை முந்திய தென் ஆப்பிரிக்கா வீரர்

வெறும் 79 பந்துகளில் 188 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
175 ரன்களை கடந்தார்: டி20 கிரிக்கெட்டில் புதிய  ராஜா.... கெய்லை முந்திய தென்  ஆப்பிரிக்கா வீரர்
Published on: 

கேப்டவுன்,

தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார். நைட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர், வெறும் 79 பந்துகளில் 188 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் இடம்பெற்றன.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பிரிட்டோரியஸ், 24 பந்துகளில் அரைசதமும், 40 பந்துகளில் சதமும் பதிவு செய்தார். பின்னர் ரன் வேகத்தை மேலும் அதிகரித்து, டி20 கிரிக்கெட்டில் இதுவரை அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்த கிறிஸ் கெய்லின் 175 ஆட்டமிழக்காத ரன்கள் என்ற சாதனையை கடந்தார்.

அவரது அதிரடியால் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 267 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. இரட்டை சதத்தை நெருங்கிய பிரிட்டோரியஸ், போட்டி முடிவில் 188 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் பக்கத்தை அவர் எழுதியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com