

புதுடெல்லி,
2026 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட் டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் அசத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தார். பீகாரை சேர்ந்த 15 வயது சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். இதில் 63 பவுண் டரியும், 72 சிக்சரும் அடங்கும்.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன் னாள் வேகப்பந்து வீச்சாளர் டெல்லியைச் சேர்ந்த அதுல் வாசன், சூர்யவன்ஷி குறித்து நேற்று அளித்த பேட்டியில்
'ஒரு தலைமுறையில் கோடியில் ஒருவருக்கு தான் இத்தகைய திறமை இருக்கும். இந்த பையனின் முதிர்ச்சி யையும், துணிச்சலையும் உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவர் எனக்கு 16 வயது சச்சின் தெண்டுல்கரை நினைவூட்டுகி றார். 1989-ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பய ணத்தின் போது 16 வயதில் அறிமுகமான தெண்டுல்கரிடம் ஆட்ட முதிர்ச்சியையும், அதி வேக பவுலர்களின் சவால்களை நேரடியாக எதிர்கொள்ளும் தைரியத்தையும் பார்த்தேன். கடவுள் அவருக்கு ஆட்டத்திறன் மற்றும் ஆற்றலுடன் சேர்த்து தனித்துவமான திறமையையும் வழங்கி ஆசிர்வதித்து இருந்தார். சூர்யவன்ஷி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருந்தாலும், தெண்டுல்கருக்கு நடந்தது போல் எல்லாம் சரியாக அமையும் என்று நம்புகிறேன். கடவுள் தெண்டுல்கருக்கு அளித்த அதே தனித்துவமான திறமையை சூர்யவன்ஷியிடமும் காண்கிறேன். என தெரிவித்தார்.