

சூர்யவன்ஷிக்கு இந்திய அணியின் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படாததை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
15 வயது அதிரடி தொடக்க வீரர் சூர்யவன்ஷி கடந்த ஜூலை மாதத்தில் இந்திய சீனியர் 20 ஓவர் அணியில் முதல்முறையாக இடம் பிடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் விளையாடி வருவதால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. சூர்யவன்ஷிக்கு இந்திய அணியின் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படாததை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
தேர்வாளர்களும், இந்திய அணி நிர்வாகமும் வைபவ் சூர்யவன்ஷி விவகாரத்தில் நடந்து கொள்ளும் விதம் சரியல்ல.அவர்கள் சூர்யவன்ஷியை ஊக்கப்படுத்தவில்லை. மாறாக அவர் ஊக்கத்தை இழக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் பெரும் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு அளித்து விட்டு. அவரை 5 ஆட்டங்களில் விளையாட வைப்பதில்லை. இது செய்யக்கூடாத ஒன்றாகும்.
சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலித்தால், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட் புத்துயிர் பெறும். சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்த 20 ஓவர் போட்டியில் அவர் பேட்டிங் செய்வதை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. அவர் எங்கு சென்றாலும் அவரது ஆட்டத்தை பார்க்க மக்கள் அதிகம் வருகிறார்கள். அவர் நன்றாக விளையாடுகிறார். அவருக்கு அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும். அவருக்கு தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கொடுங்கள். அதில் அவர் உங்களுக்காக 5-7 ஆட்டங்களை தனிநபராக வென்று கொடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.