சையத் முஷ்டாக் அலி கோப்பை; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்... பரோடா பந்துவீச்சு தேர்வு

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் இன்று பரோடாவை எதிர்கொள்கிறது.
Image Courtesy: @TNCACricket
Image Courtesy: @TNCACricket
Published on

இந்தூர்,

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகள் தங்களுக்குள் 'நாக்-அவுட்' சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் காலிறுதியை எட்டும்.

இந்த தொடரில் குரூப் பி-யில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இதுவரை ஆடிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழக அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் இன்று பரோடாவை எதிர்கொள்கிறது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com