

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, இந்த சீசனில் தனது ஆறாவது வெற்றியைப் பதிவு செய்தது.
முதலிடம்
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணிக்காக முஷீர் கான் 40 பந்துகளில் 65 ரன்களும், அங்க்ரிஷ் ரகுவன்ஷி 51 ரன்களும் விளாசினர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் தாமோர் 14 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். 210 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய உத்தரகாண்ட் அணி, மும்பை பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 16.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதர்வா அங்கோலேகர் 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் மும்பை அணி 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது
மற்றொரு போட்டியில் பரோடா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடக அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கர்நாடக அணியின் ஸ்ரீஷா ஆச்சார் மற்றும் வித்வத் காவேரப்பா தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 119 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய கர்நாடக அணி 16.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. ரோஹன் பட்டீல் 48 ரன்களும், கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 30 ரன்களும் எடுத்தனர்