சையத் முஷ்டாக் அலி டிராபி: தமிழ்நாடு அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முக்கியமான புள்ளிகளைப் பெற்றது.
சையத் முஷ்டாக் அலி டிராபி: தமிழ்நாடு அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
Published on: 

19-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பை, இந்தூர், கொல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வரு கிறது.

போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும்.

பஞ்சாப் அணி

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் எலைட் குரூப் பி போட்டியில் தமிழ்நாடு அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்காக சன்வீர் சிங் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். சுக்தீப் சிங் பஜ்வா கடைசி நேரத்தில் 7 பந்துகளில் 20 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி நெருக்கடி கொடுத்தனர். இருப்பினும் தமிழ்நாடு வீரர்கள் கடைசி வரை போராடினர். ஆனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முக்கியமான புள்ளிகளைப் பெற்றது.

X